அமெரிக்க விசா மறுப்பு-மகளைப் பார்க்க முடியாமல் சஞ்சய் தத் வேதனை!

By Sudha

Sanjay Dutt with Trishla
மும்பை: மகளைப் பார்க்க அமெரி்க்கா செல்ல முயன்ற பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு விசா மறுக்கப்பட்டது.

இந்தி நடிகர் சஞ்சய் தத் மகள் திரிஷ்லா, அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி கல்லூரியில் கிரிமினல் சட்டம் படித்து முடித்துள்ளார். அவருடைய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விரும்பிய சஞ்சய் தத், அமெரிக்கா செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவருடைய விண்ணப்பத்தை அமெரிக்க தூதரகம் நிராகரித்து விட்டது.

ஏற்கனவே, சஞ்சய் தத்திடம் பத்து ஆண்டு அமெரிக்க விசா இருந்தது. அது, காலாவதியாகி விட்டதால் மீண்டும் விண்ணப்பித்த போதிலும், இரண்டாவது முறையாக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விசா மறுப்புக்கான காரணத்தை அமெரிக்க தூதரகம் நேரடியாகக் கூறவில்லை.

விசா மறுக்கப்பட்டது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், மகளைப் பார்க்காமல் இருப்பது கொடிய தண்டனையாகத் கருதுவதாகவும் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X