அதிமுக வந்தால் கட்டப்பஞ்சாயத்து ஒழியும்! - ராதாரவி

வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரை ஆதரித்து நடிகர் ராதாரவி இன்று பிரசாரம் செய்தார். வில்லிவாக்கம், திருமங்கலம், ராஜமங்கலம், நாதமுனி, பஸ்நிலையம், மேடவாக்கம் பகுதிகளில்ராதாரவி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"இங்கு போட்டியிடும் வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்து உங்களுக்கு பணியாற்றியவர். எப்போது வேண்டுமானாலும் அவரை பார்க்கலாம். இந்த முறையும் பிரபாகரை தேர்ந்தெடுங்கள்.
புரட்சித் தலைவி ஆட்சியில்தான் கட்டப் பஞ்சாயத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். குழந்தைகள் கடத்தல் சம்பவமும் நடக்காது. தாலி பறிப்பு சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்கள் ஆட்சி அமைய அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள்", என்றார்.
Comments


Click it and Unblock the Notifications