'அடிச்சுட்டாரு'-மாஜி கணவர் மீது 'பிக் பாஸ்' ஸ்வேதா புகார்!

By Sudha

Shweta Tiwari with hubby and daughter
தன்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் ராஜா செளத்ரி, தன்னை அடித்து, உதைத்ததாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஸ்வேதா திவாரி.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பாக அவர் மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டுத்தான் வந்தார்.

3 வருடங்களுக்கு முன்பு திவாரியும், செளத்ரியும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறாராம் செளத்ரி.

இதுகுறித்து ஸ்வேதா கூறுகையில், அடிக்கடி என்னை தொலைபேசியில் அழைத்து திட்டுகிறார், அசிங்கமாக பேசுகிறார். திடீரென நள்ளிரவில் வீட்டுக்கு வந்து நின்று ஆபாசமாக பேசுகிறார், தவறாக நடக்க முயலுகிறார், சில நேரங்களில் அடித்து விடுகிறார்.

செப்டம்பர் 30ம் தேதியும் இதுபோல என்னை தொலைபேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசினார். பின்னர் குடித்து விட்டு மலத் மேற்கில் உள்ள சிவசக்தி சொசைட்டி பிளாட்டில் உள்ள எனது வீட்டுக்கு 2.30 மணியளவில் வந்தார். பின்னர் என்னை கை நீட்டி அடித்தார் என்று கூறினார் ஸ்வேதா.

தனது வீட்டில் ஸ்வேதாவுடன் அவரது மகள் பாலக் மற்றும் ஸ்வேதாவின் தாயார் தங்கியுள்ளனர். லோகந்த்வாலா பகுதியில் செளத்ரி குடியிருக்கிறார்.

செளத்ரி அடித்த அடியில் ஸ்வேதாவின் காதிலிருந்து ரத்தம் வந்து விட்டதாம். அவரை போலீஸாரே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஸ்வேதா போலீஸ் நிலையத்திற்கு வந்த சில நிமிடங்களில் பின்னாலேயே செளத்ரியும் வந்துள்ளார். அவர் மீது குடிபோதையில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியுள்ளதால் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டாம் என ஸ்வேதாகேட்டுக் கொண்டாராம். இதையடுத்து கோர்ட்டை அணுகுமாறும், கோர்ட் உத்தரவிட்டால் செளத்ரியைக் கைது செய்வதாகவும் போலீஸார் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே பிக் பாஸ் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள். இந்த நிலையில் பிக் பாஸுக்கு வருவதற்கு முன்பாகவே கணவரால் சித்திரவதைக்குள்ளாகியுள்ள ஸ்வேதாவின் நிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வேதா திவாரி ஒரு டிவி நடிகை. சினிமாவிலும் நடித்து வருகிறார். கவர்ச்சிகரமான வேடங்களில் டிவியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X