விபச்சார வழக்கில் கைதான புவனேஸ்வரி ஜாமீன் கோரி மனு

வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரம் செய்ததாக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் புவனேஸ்வரி.
இதுதொடர்பாக அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எனக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் கிடையாது. என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. போலீஸ் தரப்பில் புவனேஸ்வரிக்கு ஜாமீ்ன் தருவதை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications