கேபிள் டிவியில் எந்திரன் படத்தை ஒளிபரப்பிய மூவர் கைது!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான எந்திரன் திரைப்படம் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகமராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கோவில்பட்டியில் உள்ளூர் கேபிள் டிவியில் எந்திரன் படம் சட்டவிரோதமாக ஒளிபரப்பட்டது. இதைப்பார்த்த பொது மக்களுக்கோ இன்ப அதிர்ச்சி. ரஜினி ரசிகர்களுக்கோ பெரும் அதிர்ச்சி. இதை உறுதிப்படுத்திக் கொண்ட போலீசார், கேபிள் டிவி அலுவலகத்திற்கு விரைந்து சென்று எந்திரன் திரைப்படத்தை நிறுத்தினர். மேலும் எந்திரன் படம் ஒளிபரப்ப பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், டிரான்ஸ்மிட்டர், மாடுலேட்டர், டிவி மற்றும் ஒளிபரப்பு சாதனங்களை கைப்பற்றினர்.
இதற்கு காரணமான கலைச்செல்வம், சக்திவேல், பிரபு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கேபிள் டிவி உரிமையாளர் அமல்ராஜை வலை வீசித் தேடி வருகின்றனர்.
More from Filmibeat
3 arrested எந்திரன் திரைப்படம் கேபிள் டிவியில் எந்திரன் மூவர் கைது enthiran movie enthiran telecasted in cable tv


Click it and Unblock the Notifications











