பா படத்தை எதிர்த்து வழக்கு!

By Staff

Amitabh Bachchan with Abhishek Bachchan
பா படத்தில் ஊனமுற்றோர் மனம் புண்படும்படி சித்தரித்துள்ளதாகக் கூறி, பாட்னா நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமிதாப்பச்சன் நடித்த பா இந்திப் படம் இந்தியா முழுக்க திரையிடப்பட்டுள்ளது.

இதில் அமிதாப்பச்சன் மகனாகவும், அவருடைய மகன் அபிஷேக் பச்சன் தந்தையாகவும் நடித்து உள்ளனர். சிறுவயதிலேயே புரகேரியா என்னும் நோய் தாக்கி, தோற்றத்தில் மாறி விடும் வித்தியாசமான கேரக்டரில் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னா கோர்ட்டில் வக்கீல் சுருதிசிங் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "1995 ம் ஆண்டு ஊனமுற்றோர் பாதுகாப்பு உரிமை சட்டப்படி ஊனமுற்றோரை கேலி செய்வது, அவர்களை கேலியாக சித்தரிப்பது குற்றமாகும்.

அமிதாப்பச்சன் பா படத்தில் புரகேரியா நோய் தாக்கிய 13 வயது சிறுவனாக நடித்து உள்ளார். அவரை கேலிப் பொருளாக்கி படத்தில் காட்டுகிறார்கள். இது ஊனமுற்றோரை அவமதிப்பது போல உள்ளது.

ஊனமுற்றோர் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்தப் படத்தின் நடிகர் தயாரிப்பாளர் அமிதாப்பச்சன், படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X