திலகன் மன்னிப்பு கேட்க வேண்டும்-விஸ்வகர்மா சங்கம்

மலையாள நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் நடிகர் திலகன் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனை விமர்சித்து நடிகர் திலகன் சில கருத்துக்களை தெரிவித்தார். அவரது கருத்துகள் தங்கள் சாதியை இழிவுபடுத்தி விட்டது என்று விஸ்வகர்ம யுவஜன பெடரேசன் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
நடிகர் சங்க பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த திலகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அதோடு கொல்லன், கொல்லத்தி என்று விமர்சித்து உள்ளார். இது எங்கள் மனதை புண்படுத்தியுள்ளது.
இதற்காக திலகன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம். மேலும் அவர் சாலையில் இறங்கி நடக்க முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மலையாள நடிகர் அமைப்பான 'அம்மா'-விலிருந்து நீக்கப்பட்ட திலகன் இப்போது புதிய போட்டி அமைப்பை ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











