விபச்சாரம்: துணை நடிகை கைது!

By Staff

சென்னை: விபச்சாரம் செய்ததாக சிவாஜி உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள துணை நடிகை ஜோதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் சாலமோன் ஸ்கொயர் என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் துணை நடிகை ஒருவர் விபச்சாரம் செய்து வருவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு மாறு வேடத்தில் புகுந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரு பெண்களைப் பிடித்தனர்.

ஒரு பெண் ஓடப் பார்த்தார். அவரைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்பெண்ணின் பெயர் ஜோதி. 40 வயதாகும் இவர், சமீபத்தில் சிவாஜி படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவருக்கு அடையாறில் வீடு உள்ளது. கோடம்பாக்கம் வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கணவர் என்று ஒருவர் உண்டு. ஆனால் அவருடன் ஜோதி சேர்ந்து வாழவில்லை. சினிமாவில் துணை நடிகையாக இருந்து கொண்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஏகப்பட்ட இளம் பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார் ஜோதி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜோதியைக் கைது செய்த போலீஸார் பிடிபட்ட சுமதி, அனிதா ஆகிய மற்ற இரு பெண்களையும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X