அமீர்-சீமான் ஜாமீனை எதிர்த்து காங். வழக்கு!

By Staff

Seeman with Amir
மதுரை:இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் காங்கிரஸ் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்தவரான முத்துபாண்டி, காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவின் அமைப்பாளராக உள்ளார். இவர் தாக்கல் செய்துள்ல ரிட் மனுவில்

தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சார்பில் இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த மாதம் 19ம் தேதி ராமேசுவரத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது டைரக்டர்கள் அமீர், சீமான் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பேசினார்கள். கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 27ம் தேதி சென்னையில் இருவரையும் கைது செய்தனர். அவர்களது ஜாமீன் மனு ராமேஸ்வரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

அடுத்தநாள் ராமநாதபுரம் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு அவர்கள் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

என்ன காரணத்துக்காக ஜாமீன் வழங்கப்பட்டது என்றும் அவர் தனது உத்தரவில் கூறவில்லை. டைரக்டர்களின் பேச்சு தேச ஒற்றுமைக்கு எதிராகவும், சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு தூண்டுகோலாகவும் இருந்தது. அதைக் கருத்தில் கொள்ளாமல் சாதாரண குற்றத்துக்காக வழங்குவது போல ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜாமீன் விடுதலைக்கு பிறகும் இருவரும் அதுபோலவே பேசி வருகிறார்கள். அது தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக உள்ளது. இதுபோல பேசுவது நாடுகளுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X