ஃபெப்ஸி தலைவர்: வி.சி.குகநாதன் வெற்றி!
ஃபெப்ஸி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக வி.சி.குகநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் வலுவான தொழிலாளர் அமைப்பான ஃபெப்ஸியின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் ஃபெப்ஸியில் அங்கம் வகிக்கும் 23 அமைப்புகளைச் சேர்ந்த செயலாளர்கள் ஓட்டு போட்டு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
தலைவர் பதவிக்கு ஏற்கெனவே தலைவராக இருந்த ஃபெப்ஸி விஜயனும், இயக்குநர் வி.சி.குகநாதனும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் வி.சி.குகநாதன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.விஜயன் 10 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
செயலாளராக ஜி.சிவா 12 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஏற்கனவே செயலாளராக இருந்த உமாசங்கர்பாபு 11 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். பொருளாளர் பதவிக்கு ராஜேந்திரன், சண்முகம் ஆகிய இருவரும் போட்டியிட்டார்கள். இருவருக்கும் தலா 11 ஓட்டுகள் கிடைத்தன. எனவே, பொருளாளராக யாரை தேர்ந்து எடுப்பது? என்பதை நாளை முடிவு செய்கிறார்கள்.
துணை தலைவர்களாக ஆபு கேபிரியல், எஸ்.ஆர்.சந்திரன், வி.முரளி, எம்.ஏ.ராமதுரை, வி.என்.சுவாமிநாதன் ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
துணை செயலாளர் பதவிக்கு ஞானகுமார், ஹேமந்த் ராவ், கதிரவன், கதிர்வேல், மூர்த்தி ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











