நடிகர் அம்பரீஷூக்கு பிலிம்பேர் விருது!

கன்னட திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார் அம்பரீஷ். கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். ப்ரியா படத்தில் ரஜினியுடன் இன்னொரு நாயகனாக நடித்தவர் இவர்தான்.
இவரின் நடிப்பை பாராட்டி மத்திய, மாநில அரசுகள், திரையுலகம், தனியார் அமைப்புகள் பல விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
இந்நிலையில் பிலிம்பேர் சார்பில் இவ்வாண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அம்பரீஷை தேர்வு செய்துள்ளது.
விரைவில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது. இந்தச் செய்தி வெளியானதும் பெங்களூர், மைசூர், மண்டியாவில் உள்ள அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
More from Filmibeat
actor ambarish நடிகர் அம்பரீஷ் பிலிம்பேர் விருது வாழ்நாள் சாதனையாளர் விருது filmfare award kannada film industry life time achievement


Click it and Unblock the Notifications











