காங்கிரசில் சேரவே மாட்டேன்!-ரோஜா

தெலுங்கு தேசம் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவர் ஆர்.கே.ரோஜா காங்கிரசில் சேர முயற்சி செய்கிறார், என்று, சமீபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியே பகிரங்கமாகப் பேசி இருந்தார். இது தவறானது என்றும், காங்கிரசில் சேரும் திட்டமே தனக்கு இல்லை என்றும், இப்போது நடிகை ரோஜா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்அவர் நிருபர்களிடம் பேசுகையில், ராஜசேகர ரெட்டி கூறுவது உண்மை அல்ல. தெலுங்கு தேசம் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர் இதை கூறி இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கவே பிடிக்காது என்றார்.
Comments


Click it and Unblock the Notifications