twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைப்பட இயக்குநர் மணி கௌல் மரணம்

    By Shankar
    |

    Mani Kaul
    டெல்லி: இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் இயக்குநர் மணி கெளல் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார்.

    அவருக்கு வயது 66. அவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மணிகெளல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 1 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மணிகெளல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்தவர்.

    1969-ல் 'உஸ்கி ரோடி' படத்தின் மூலம் மணிகெளல் தனது திரையுலகை வாழ்க்கையை தொடங்கினார். அந்த படம் சிறந்த படத்துக்கான பிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருது பெற்றது. அவரது ஆஷாத் கா ஏக் டின், துவிதா மற்றும் இடியட் ஆகியவையும் சிறந்த பட விருதுகளைப் பெற்றுள்ளன.

    1989-ல் இவர் இயக்கிய சித்தேஸ்வரி என்ற செய்திப் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கவுல்.

    மாற்று சினிமாவுக்கான இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளுள் ஒருவர் கவுல் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Noted film maker Mani Kaul, who was considered one of the pioneers of new Indian cinema, died here today after prolonged illness. Kaul, 66, is survived by two sons and as many daughters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X