அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார் எஸ்ஏ சந்திரசேகரன்!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அவர் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.
திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டதால், அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார் எஸ்ஏசி. இவரது மகன் நடிகர் விஜய் தலைமையிலான மக்கள் இயக்கமும் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்பிய எஸ் ஏ சந்திரசேகரனை, மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் திரளாக வந்து மீனம்பாக்கத்தில் வழியனுப்பினர்.
More from Filmibeat
அதிமுக ஆதரவு எஸ்ஏ சந்திரசேகரன் தேர்தல் பிரச்சாரம் election campaign s a chandrasekaran sac tn assembly polls 2011


Click it and Unblock the Notifications











