நடிகை சினேகாவுக்கு செருப்பு பார்சல் - இ.ம.க ஆவேசம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் சென்று, சாமி தரிசனம் செய்தால் தங்களது கஷ்டம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில், கடந்த பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடிகை சினேகா கிரிவலம் சென்றார். வழக்கமாக கிரிவலம் செல்பவர்கள் வெறும் காலில் செல்வது வழக்கம். ஆனால் தனது தந்தை ராஜாராமுடன் சென்ற சினேகா, காலில் செருப்பு அணிந்து சென்றார்.
இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கிரிவலப்பாதையில், செருப்புடன் சென்ற நடிகை சினேகாவை கண்டித்து திருப்பூரிலிருந்து இந்து மக்கள் கட்சி சார்பில், நடிகை சினேகாவுக்கு பார்சலில் செருப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
நடிகை சினேகா மன்னிப்பு கேட்கும் வரை இந்து மக்கள் கட்சி போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகைகள், மத நம்பிக்கையுடன் மோதுவது இது புதிதல்ல. முன்பு, ஒரு திரைப்பட விழாவில் மேடையில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளுக்கு முன்பு காலில் செருப்புடன் கால் மேல் கால் போட்டபடி ஒய்யாரமாக அமர்ந்து சர்ச்சையைக் கிளப்பினார் குஷ்பு என்பது நினைவிருக்கலாம்.
இப்போது நடிகை சினேகா செருப்புச் சிக்கலில் சிக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











