twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம்

    By Chakra
    |

    Sarath Kumar
    தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வரும் கட்டிடத்தை இடித்துவிட்டு 5 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த 1952-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் தான் அதன் அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்திலேயே கலையரங்கம், பிரிவியு தியேட்டர்கள், வாடகை அலுவலகங்கள் மற்றும் நடன பள்ளியும் உள்ளன.

    இந்த கட்டிடம் தற்போது பழுதடைந்துள்ளதால் இதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று சங்க பொதுக்குழு தீர்மானித்தது.

    நடிகர் சங்கத்தின் மாதாந்திர செயற்கழு கூட்டம் கடந்த 1ம் தேதி அதன் தலைவர் நடிகர் சரத் குமார் தலையில் நடந்தது. இதில் புதிய அலுவலகக் கட்டிடம் கட்டும் பணிகளை துரிதமாக துவங்க முடிவு செய்யப்பட்டது.

    தற்போதுள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வாடகை அலுவலகங்கள் மற்றும் கேண்டீன் ஆகியவற்றை காலி செய்யும்படி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் உடனடியாக துவங்கும். ஒரு வருடத்துக்குள் புதிய கட்டிட வேலை நிறைவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

    தற்காலிகமாக நடிகர் சங்கம் செயல்பட ஒரு வாடகை கட்டிடத்தை தேடி வருகின்றனர். புதிய கட்டிடம் 5 மாடிகளுடன் நவீன வசதிகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதில் சங்க நிர்வாகிகளுக்கு என்று தனி அலுவலக அறைகள், 200 பேர் அமரக்கூடிய பிரிவியூ தியேட்டர், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X