கவிஞர் வாலி வெளியிட்ட 'ஒரு சினிமா நிருபரின் டைரியிலிருந்து....'

ஆனால் அதே சமாச்சாரத்தை விறுவிறுப்பாக எழுதி பத்திரிகை, இணையதளம் மூலம் படிக்கத் தருவதுதான் சினிமா நிருபர்களின் வேலை.
அப்படிப்பட்ட ஒரு சினிமா நிருபரின் டைரிக் குறிப்புகள், சுவாரஸ்யமான புத்தகமாக வெளிவந்துள்ளது, "ஒரு சினிமா நிருபரின் டைரியிருந்து திரைச்சுவைகள்" என்ற பெயரில்.
எழுதியிருப்பவர் மேஜர்தாஸன். குமுதம் உள்ளிட்ட பல பத்திரிகை மற்றும் இணையதளங்களில் பல ஆண்டுகாலம் பணியாற்றியவர். கே பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், வாலி, எம்எஸ்வி என்ற பல சாதனையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
இவரது இயற்பெயர் தேவாதிராஜன். தன்னை எழுதவும் பத்திரிகையாளனாக வளரவும் பெரிதும் ஊக்கமளித்த மறைந்த நடிகர் மேஜர் சுந்தரராஜனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தன் பெயரையே மேஜர்தாஸன் என மாற்றிக் கொண்டார்.
பூம்புகார் பதிப்பக வெளியீடாக வந்துள்ள "ஒரு சினிமா நிருபரின் டைரியிருந்து திரைச்சுவைகள்" என்ற இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடந்தது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எனப்படும் பலரும் விழாவுக்கு வந்திருந்து வாழ்த்திப் பேசினர். கவிஞர் வாலி முதல் நூலை வெளியிட்டார். மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் எஸ்பி முத்துராமன், விசி குகநாதன், டிபி கஜேந்திரன், மூத்த நடிகைகள் மனோரமா, சாரதா, ராஜ்யஸ்ரீ, எம்என் ராஜம், சச்சு, குட்டி பத்மினி என ஏராளமானோர் விழாவுக்கு வந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











