இன்றைய ரிலீஸ்.. உன் சமையலறையில், மஞ்சப்பை!

By Shankar

இந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படங்களான உன் சமையலறையில் மற்றும் மஞ்சப்பை வெளியாகின்றன.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்திப் படமான ஹாலிடே -யும் இன்றுதான் வெளியாகிறது.

உன் சமையல் அறையில்

உன் சமையல் அறையில்

பிரகாஷ் ராஜ் தயாரிப்பு இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் உன் சமையல் அறையில். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் வெளியாகிறது. டப்பிங் படமாக அல்ல, நேரடிப் படமாகவே. சினேகா நாயகியாக நடித்துள்ளார்.

இளையராஜா

இளையராஜா

மூன்று மொழிகளிலுமே இந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசை. பாடல்கள் பிரபலமாகி, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தெலுங்கில், ஈ ஜென்மமு... படு ஹிட்.

மஞ்சப்பை

மஞ்சப்பை

இயக்குநர்கள் லிங்குசாமி - சற்குணம் தயாரிப்பில், என். ராகவன் இயக்கத்தில் வெளிவரும் படம் மஞ்சப்பை. விமல்- லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ராஜ்கிரண்தான் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். கலக்கியிருக்கிறாராம் மனிதர். என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஹாலிடே

ஹாலிடே

தமிழில் விஜய் நடித்து ஏஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கியின் இந்தி ரீமேக்தான் இந்த ஹாலிடே. ஏ ஆர் முருகதாஸ்தான் இயக்கியுள்ளார். அக்ஷய் குமார் - சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடித்துள்ளனர். சென்னையில் ஒரு டஜன் அரங்குகளில் வெளியாகிறது.

ஹாலிவுட்

ஹாலிவுட்

டாம் க்ரூஸ் நடித்த ஹாலிவுட் படமான எட்ஜ் ஆப் டுமாரோ படம் 3டியில் இன்று வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X