வாதிட்ட விஜயக்குமாருக்கு கமிஷனர் விட்ட எச்சரிக்கை

Vijayakumar ,Nalini, Sri Priya, and Seetha
நடிகைகள் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருப்பவர்களை அடித்து நொறுக்கிப் போட்டு விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டோம் என்று கோபமாக பேசிய நடிகர் விஜயக்குமாரை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கடுமையாக எச்சரித்தார்.

நேற்று நடிகர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டமாக கமிஷனர் அலுவலகம் சென்று ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து நடிகைகள் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக முன்னணி தமிழ் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கவும், அதன் ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி
மனு கொடுத்தனர்.

அப்போது ஆணையர் ராஜேந்திரனிடம் நடிகர் விஜயக்குமார் படு ஆவேசமாக, அத்தனை நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து, அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருப்பவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி, பத்திரிக்கை அலுவலகத்தையே சூறையாடி விடுவோம் என்று கோபமாக கூறினார்.

இதைக் கேட்ட கமிஷனர் ராஜேந்திரன் கோபமடைந்து, எல்லை மீறிப் பேசக் கூடாது. நீங்கள் போலீஸ் கமிஷனரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அந்தப் பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நீங்கள் தான் முக்கியக் காரணம் என்று கருத நேரிடும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அருகில் இருந்த நடிகர்கள் விஜயக்குமாரை அமைதிப்படுத்தி அங்கிருந்து வெளியேறச் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X