twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒஸ்தி படத்தை நாங்கள் திரையிட மாட்டோம்! - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

    By Shankar
    |

    ஒஸ்தி படம் வருமா வராதா... இந்தக் கேள்வி ரசிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்தப் பட யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது.

    காரணம், கடந்த ஒரு வாரமாக இந்தப் படம் டிசம்பர் 8-ம் தேதி ரீலீஸ் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை ரிலீஸாக விடமாட்டோம் என்று இன்னொரு தரப்பும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது.

    வரவிடமாட்டோம் என்பதற்கு முக்கிய காரண், இந்தப் படத்தை சன் டிவி வாங்கியிருப்பதுதான். சன் பிக்சர்ஸ் தரவேண்டிய ரூ 4 கோடியை தியேட்டர் உரிமையாளர்களுக்கு தந்தால்தான் படத்தை ரிலீசாக விடுவோம் என்கிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்துக்கும் இதே சிக்கல்தான்.

    ஆனால் இரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் கலந்துபேசி, இந்தப் படத்தை வெளியிடத் தடையில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் என பலரும் கையெழுத்திட்டிருந்தனர்.

    அறிக்கை வெளியான அன்று மாலையே மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், "அந்த அறிக்கையே செல்லாது. அதில் நாங்கள் கையெழுத்துப் போடவுமில்லை," என்றார்.

    மேலும் கூறுகையில், "ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. இருபடங்களையும் திரையிட மாட்டோம். எங்கள் டெபாசிட்டை தருவதாக முதலில் ஒப்புக் கொண்டு இப்போது மீண்டும் முரண்டு பிடிக்கிறது சன் பிக்சர்ஸ். ஆனால் அபிராமி ராமநாதனுக்கு மட்டும் அவரது பங்கான ரூ 80 லட்சத்தைக் கொடுத்துவிட்டது. இதனால் அவர் கையெழுத்துப் போடுகிறார்.

    எங்கள் நலனுக்கு எதிராக செயல்படும் அபிராமி ராமநாதனுக்கு இனி எந்த வகையிலும் ஒத்துழைப்பு தருவதாக இல்லை. அவர் திரையரங்கில் வெளியாகும் படங்களை இனி நாங்கள் திரையிட மாட்டோம்.

    தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகர் இப்படி செய்திருக்கக் கூடாது. நாங்கள் வராமலேயே எங்கள் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அறிக்கையில் யாரையோ விட்டு கையொப்பமிடச் சொல்வது நல்ல செயல் அல்ல.

    ஒஸ்தியை நாங்கள் யாரும் திரையிட மாட்டோம். இது நிச்சயம்," என்றார்.

    ஆனால், ஒஸ்தி படம் திட்டமிட்டபடி வரும் என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்.

    என்னதான் நடக்குது... அறிக்கை சண்டையை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க!

    English summary
    The confusion over the release of Dharani directed Osthi still continues. The Tamil Nadu Film Exhibitors Association has strongly announced that they would never allow to release the film before settling their dues from Sun Pictures.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X