நடிகை ஜீவிதா ராஜசேகர் வீட்டில் திருடியவர் கைது!

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் ராஜசேகர் வீட்டில் நாகராஜு (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் தனது வீட்டை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு கடந்த 2-ந் தேதி ராஜசேகர் தனது மனைவி நடிகை ஜீவிதாவுடன் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தார்.
இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நாகராஜு, வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் சாமி சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டார்.
அந்த நகைகளை, நேற்று முன்தினம் ஸ்ரீகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்க முயன்றபோது, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மீட்டனர்.
பின்னர் இவை ஜீவிதாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
More from Filmibeat
actress jeevitha rajashekar திருட்டு நடிகை ஜீவிதா ராஜசேகர் போலீஸ் கைது வேலைக்காரர் hyderabad police arrest robbery servant


Click it and Unblock the Notifications











