முதல்வரை சந்தித்த ரம்பா-சின்மயி

ரம்பாவுடன், உடன் அவரது தாயார் உஷா ராயி, சகோதரர் வாசு ஆகியோர் சென்றிருந்தனர்.
இன்று முதல்வரைச் சந்தித்த மற்றொரு திரை கலைஞர் சின்மயி.
2007ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முதல்வருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துப் பெற்றார். இச்சந்திப்பின்போது அவரது தாயார் பத்மாசினி உடனிருந்தார்.
டத்தோ சாமிவேலு மகன் சந்திப்பு:
மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ சாமிவேலு மகன் வேல்பாரியும் இன்று முதல்வரைச் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கூறப்பட்டது. அவருடன் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர் பிரசிடண்ட் ஏ.அபுபக்கர் உடனிருந்தார்.
ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் சந்திப்பு:
அதே போல முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் சந்தித்தார்.
கருணாநிதிக்கு 13ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் தேவர் சமுதாய அமைப்புகள் சார்பாக, சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் அவர்கள் வாழும் மாவட்டத்திலேயே சாதிச் சான்றிதழ் வழங்க அரசு ஆணை பிறப்பித்தமைக்காக பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
அதற்கான அழைப்பிதழை வாண்டையார் முதல்வரிடம் வழங்கினார்.


Click it and Unblock the Notifications











