மோகன்லால் படத்திலிருந்து ஷ்ரியா திடீர் விலகல்

By Sudha

Shriya
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நாயகனாக நடிக்கும் கேசனோவா படத்திலிரு்து திடீரென விலகியுள்ளார் நடிகை ஷ்ரியா.

மோகன்லால் நடிக்கும் புதிய படம் கேசனோவா. இதில் சமீரா ரெட்டி நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்திற்கு ஷ்ரியாவை புக் செய்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஷ்ரியா.

ஏன் இந்த திடீர் விலகல் என தெரியாமல் கேசனோவா குழுவினர் குழம்புகின்றனர். சர்வதேச இயக்குநர் தீபா மேத்தா புதிதாக இயக்கப் போகும் படம் மிட்நைட் சில்ட்ரன்ஸ். சல்மான் ருஷ்டியின் நாவலைத்தான் படமாக்குகிறார் தீபா. இப்படத்தில் கவர்ச்சிகரமான பெண் வேடத்திற்கு ஷ்ரியாவை சல்மான் ருஷ்டி பரிந்துரைத்துள்ளார். இதை தீபாவும் ஏற்றுள்ளார்.

ஏற்கனவே குக்கிங் வித் ஸ்டெல்லா படத்திலும் தீபா மேத்தா இயக்கத்தில் ஷ்ரியா நடித்துள்ளார். தற்போது 2வது படமாக கிடைக்கவே குஷியாகியுள்ளார் ஷ்ரியா.இதில் நடிப்பதற்காகத்தான் மோகன்லால் படத்திற்கு டாட்டா காட்டி விட்டாராம்.

ஆனால் இதை மறுக்கிறார் ஷ்ரியா. பெரிய படம் என்பதால் ஒப்புக் கொண்டேன். ஆனால் ஷூட்டிங்கை ஆரம்பிக்கவே இழுத்தடிக்கிறார்கள். இதனால் கால்ஷீட் வீணாகி விட்டது. எனவே தான் விலகி விட்டேன் என்று காரணம் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X