பாலா பாராட்டிய 'போராளி'!
வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சசிகுமார் - சமுத்திரக்கனியின் போராளி படத்துக்கு சக படைப்பாளிகளிடமிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.
குறிப்பாக சசிகுமாரின் குரு பாலா இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டியதோடு, சசிகுமாரின் நடிப்பு தன்னை ஆச்சர்யப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
போராளி படத்தின் சின்னச் சின்ன குறைகளைக் கூட மறக்கடிக்கச் செய்யுமளவு அமைந்திருப்பது சசிகுமாரின் யதார்த்த நடிப்பும், ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டும் ஆவேசமும்தான்.
இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்து முடித்ததும், "தமிழ் சினிமாவுக்கு ரொம்ப அசத்தலான ஆக்ஷன் ஹீரோ கிடைச்சிட்டான்யா... அருமை," என்று பாராட்டியுள்ளார்.
படம் குறித்துக் கூறுகையில், "பெருமையா இருக்கு," என்றார்.
இரண்டு வரிகள் என்றாலும், திருக்குறள் மாதிரி நச்சென்று விமர்சனம் செய்திருக்கிறார்.
அதான் பாலா!
Comments


Click it and Unblock the Notifications