twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விபச்சார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி அரசியலில் குதித்தார் - மூ.மு.கவில் மகளிர் அணி செயலாளரானார்

    By Staff
    |

    Bhuvaneshwari
    சென்னை: வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி திடீரென தீவிர அரசியலில் குதித்து விட்டார். ஜாதிக் கட்சியான டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அடையாரில் உள்ள தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிபட்டவர் புவனேஸ்வரி. இவரது கைது சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான நடிகைகள் குறித்த செய்திகள் தமிழகத்தில் புயலைக் கிளப்பின.

    எந்தெந்த நடிகை உல்லாசத்திற்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற பட்டியல் தன்னிடம் இருப்பதாக கூறி அதை போலீஸாரிடம் புவனேஸ்வரி தெரிவித்ததாகவும், வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்த தன்னை கைது செய்தது நியாயமில்லை என்று கூறி புவனேஸ்வரி புலம்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

    தற்போது புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென அரசியலில் குதித்து விட்டார் புவனேஸ்வரி.

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் சேர்ந்துள்ளார். அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் சேதுராமன் முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.

    இதுகுறித்து புவனேஸ்வரியின் வக்கீல்கள் டி.ரமேஷ், காமேஸ்வரராவ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திரைப்பட மற்றும் டி.வி. நடிகை டி.புவனேஸ்வரி, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் இணைந்தார்.

    சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார். நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது என்றனர்.

    முன்பு அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்தார் புவனேஸ்வரி. தேர்தல் பிரசாரத்திலும் கூட ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதான பின்னர் தற்போது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் இணைந்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X