ஸ்னேகாவுக்கு எதிரான போராட்டம்- இந்து மக்கள் கட்சி வாபஸ்

By Staff

Sneha
திருப்பூர்: நடிகை ஸ்னேகாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் சென்று, சாமி தரிசனம் செய்தால் தங்களது கஷ்டம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில், கடந்த பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடிகை ஸ்னேகா கிரிவலம் சென்றார். வழக்கமாக கிரிவலம் செல்பவர்கள் வெறும் காலில் செல்வது வழக்கம். ஆனால் தனது தந்தை ராஜாராமுடன் சென்ற ஸ்னேகா, காலில் செருப்பு அணிந்து சென்றார்.

இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கிரிவலப்பாதையில், செருப்புடன் சென்ற நடிகை ஸ்னேகாவை கண்டித்து திருப்பூரிலிருந்து இந்து மக்கள் கட்சி சார்பில், நடிகை ஸ்னேகாவுக்கு பார்சலில் செருப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.

நடிகை ஸ்னேகா மன்னிப்பு கேட்கும் வரை இந்து மக்கள் கட்சி போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகை ஸ்னேகா சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில், நடிகை ஸ்னேகா திருவமண்ணாமலையில் நடந்த சம்பவம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்துடன் போனில் பேசினார்.

அப்போது ஸ்னேகா கூறுகையில்,

எனக்கு கடவுள் பக்தி அதிகம். அதனால் தான் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றேன். எனக்கு, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் கால் எலும்பு முறிந்து விட்டது. அதன் பாதிப்பு இன்னும் என் காலில் உள்ளது. அதனால், என்னால் செருப்பு அணியாமல் நடக்க முடியாது.

எனவே, கோவில்களுக்கு செல்வதற்கென்றே தனியாக துணியினால் பிரயோகத்திமாக செய்யப்பட்ட செருப்பை வாங்கி பயன்படுத்தியுள்ளேன். அந்த செருப்பை அணிந்து கொண்டு தான் கிரிவலம் சென்றேன் என்று விளக்கமளித்தார் ஸ்னேகா.

இதனையடுத்து, நடிகை ஸ்னேகாவின் பேச்சில் உண்மை இருப்பதை அறிந்து இந்து மக்கள் கட்சியின் பேராட்டத்தை விலக்கிக் கொள்வதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X