twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாள நடிகர் முரளி மரணம்!

    By Staff
    |

    Murali
    தேசிய விருது பெற்ற பிரபல மலையாள - தமிழ் நடிகர் முரளி நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 55.

    நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட முரளியின் உடல் உறுப்புகள் சில தினங்களுக்கு முன் செயல் இழந்ததால் அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    தங்களால் முடிந்த அளவு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் நேற்று இரவு அவர் உடல் நிலை மோசமடைந்து இறந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மலையாளத்தில் முன்னணி நடிகரான முரளி, தமிழில் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

    விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு டும்டும்டும், பொல்லாதவன், ஜூட் படங்களிலும் நடித்தார் முரளி.

    சமீபத்தில் சூர்யாவுடன் ஆதவன் படத்தில் நடித்து வந்தார்.

    மலையாளத்தில் முரளியின் படங்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றவை. பிரபல மலையாள இயக்குநர் அரவிந்தன் இயக்கிய சிதம்பரம் படத்தில் அறிமுகமான முரளிக்கு, 2002-ம் ஆண்டு, நெய்துக்காரன் படத்துக்காக மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    அதரம், கனாகினவு, தாளோலம், நெய்துக்காரன் மற்றும் அமரம் படங்களுக்காக மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருந்த முரளி, தீவிரமான மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்.
    முரளியின் மறைவு கேரள திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    திருவனந்தபுரம் விஜேடி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினரும் பொதுமக்களும் திரளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

    கடந்த 45 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து லேஹித்தாஸ், ராஜன் பி தேவ் மற்றும் முரளி ஆகிய மூன்று முக்கிய கலைஞர்களை இழந்துள்ளது தென்னிந்திய திரையுலகம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X