மல்லிகா ஷெராவத்தின் அண்ணன் மும்பை ஏர்போர்ட்டில் கைது

By Sudha

Mallika Sherawat
பெருமளவிலான வெளிநாட்டுப் பணம் மற்றும் வெளிநாட்டுப் பொருட்களுடன் வந்த கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தின் அண்ணனை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் பிடித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மல்லிகா ஷெராவத்தின் அண்ணன் விக்ரம் லம்பா. இவர் துபாயிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் திரும்பி வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது, பெருமளவிலான வெளிநாட்டுப் பணத்தை அவர் வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் வெளிநாட்டுப் பொருட்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார்.

இதையடுத்து அன்னியச் செல்வாணி சட்டத்தின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மும்பை விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதத்தில் இதுபோல விஐபி பிடிபடுவது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன்பு நடிகைகள் பிபாஷா பாசு, மினிஷா லம்பா ஆகியோர் சுங்கத்துறையினரால் பிடிக்கப்பட்டு வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரிக்கப்பட்டனர். பிபாஷா பாசு ரூ. 13,000 வரி கட்டிய பின்னர்தான் விடுவிக்கப்பட்டார். மினிஷா, வைர நெக்லஸுடன் வந்தபோது சிக்கிக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X