ஏர்டெல்லின் டிடிஎச் சேவை- 9ம் தேதி முதல் தொடக்கம்

முன்னணி செல்போன் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் டிடிஎச் சேவையை தொடங்குகிறது. ஏர்டெல் டிஜிட்டல் டிவி என்ற பெயரில் வரும் 9ம் தேதி சேவையை தொடங்குகிறது. இதன் மூலம் 175 சேனல்கள் வழங்க உள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் தலைமை செயலதிகாரியும், இணை நிர்வாக இயக்குநருமான மனோஜ் கோலி கூறுகையில், இந்திய டிடிஎச் துறை மிகச் சிறப்பான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும் தற்போதைக்கு 3 சதவீத அளவிலான பங்களிப்பே உள்ளது. ஆனால் வேகமாக இது உயரும் வாய்ப்பு உள்ளது.
நாடு முழுவதும் டிடிஎச் சேவைக்கு 22.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது மேலும் அதிகரிக்கும். எனவேதான் இதுவே சரியான சமயம் என தீர்மானித்து இத்துறைக்கு வந்துள்ளோம் என்றார்.
62 நகரங்களில், 21 ஆயிரம் ரீடெய்ல் டீலர்களுடன் தனது சேவையை தொடங்குகிறது ஏர் டெல்.
தற்போது இந்தியாவில் டாடா ஸ்கை, டிஷ் டிவி, ரிலையன்ஸ் பிக் ஆகியவை முன்னணி டிடிஎச் நிறுவனங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியின் சன் டைரக்ட்டும் லேட்டஸ்டாக களம் புகுந்து கலக்கிக் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











