மீண்டும் ரஹ்மானுடன் கூட்டணி போடும் கதிர்!

இருவரும் முதலில் இணைந்த படம் உழவன். இந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. ஆனால் ரஹ்மானின் அலை அப்போதுதான் ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றன.
அதன் பிறகு காதல் தேசம் வந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற முஸ்தபா முஸ்தபா இன்றும் கூட முணுமுணுக்கப்படும் பாடல். பின்னர் வந்த காதலர் தினம் படத்திலும் இருவரது கூட்டணியும் பெரிதாக பேசப்பட்டது. இருவரும் கடைசியாக பணியாற்றிய காதல் வைரஸ் படத்தில். இந்தப் படத்திலும் பாடல்கள் மட்டும பெரிதாக பேசப்பட்டன.
இப்போது கோடை விடுமுறை என்ற படத்தை இயக்குகிறார் கதிர். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கும் இசை ரஹ்மான்தான் என்று கதிர் கூறிவருகிறார். ஆனால் ரஹ்மான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Comments


Click it and Unblock the Notifications