சுயம்வரம் மூலம் தேர்வு செய்த டிம்பிளை மணந்தார் ராகுல் மகாஜன்

By Staff

Rahul with Dimple
என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சி மூலம் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி டிம்பிள் கங்குலியை மணந்து கொண்டார் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன்.

ராகுல் மகாஜன் தனது காதல் மனைவி ஷ்வேதா சிங்கை, தந்தை மறைந்த சில மாதங்களில் விவாகரத்து செய்தார். இதையடுத்து சமீபத்தில் என்டிடிவி இமேஜின் மூலம் சுயம்வரம் ஒன்றை நடத்தினார்.

இதன் இறுதிப் போட்டியில், 21 வயதான டிம்பிள், 20 வயதான ஹர்பிரீத் சப்ரா, 25 வயதான நிகுஞ்ச் மாலிக் ஆகியோர் தேர்வாகினர்.

இவர்களில் டிம்பிளை தனது வாழ்க்கைத் துணைவியாக தேர்வு செய்தார் ராகுல்.

இதையடுத்து அவரை மணந்து கொண்டார் ராகுல் மகாஜன். பிரமோத் மகாஜனை சுட்டுக் கொன்ற அவரது தம்பி பிரவீன் மகாஜன் சமீபத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதைப் பொருட்படுத்தாமல் தனது கல்யாணத்தை முடித்துக் கொண்டிருக்கிறார் ராகுல்.

மும்பையில் உள்ள லீலா கெம்பின்ஸ்கி ஹோட்டலில் மிகப் பிரமாண்ட முறையில், ஆடம்பரமாக திருமணம் நடந்தது. ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு ராகுல் - டிம்பிள் ஜோடியை வாழ்த்தினர்.

இதன் மூலம் ராகுலின் வாழ்க்கையில் 2வது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X