மருத்துவமனையில் விஜயகுமாரை சந்தித்த ரஜினி!

நடிகர் விஜயகுமார் திடீர் மாரடைப்பு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவரை, நேற்று காலை 11 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து பார்த்தார். விஜயகுமார் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா சரத்குமார், இயக்குநர் கதிர் ஆகியோரும் விஜயகுமாரைப் பார்த்தார்கள்.
விஜயகுமார் அபாயகட்டத்தை தாண்டிவிட்டாலும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பெற வேண்டியுள்ளதால், ஐசியுவில் வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள்.
விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணு, இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா, மகன் அருண் விஜய், மகள்கள் கவிதா, அனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியோர் அருகிலிருந்து கவனித்து வருகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications