தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவி சென்னையில் மரணமடைந்தார்.
விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட் ராஜ் படத்தை இயக்கியவர் ரவி. இதில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக ஆமனி நடித்திருந்தார். இதேபோல பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, அரவிந்தசாமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்த என் சுவாசக் காற்றே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களையும் இயக்கியுள்ளார். தெலுங்கிலும் படம் இயக்கியுள்ளார்.
45 வயதான ரவிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
மரணமடைந்த ரவிக்கு சுமதி என்ற மனைவியும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.
More from Filmibeat
ஆனஸ்ட் ராஜ் இயக்குநர் ரவி இயக்குநர் கேஎஸ் ரவி மரணம் சினிமா இயக்குநர் ரவி மரணம் director ksravi dead director ravi dead honest raj director ravi dead


Click it and Unblock the Notifications











