twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்லூரிகளில் விருப்ப பாடமாக வெளிநாட்டு மொழிகள்!! - இயக்குநர் தங்கர்பச்சான்

    By Shankar
    |

    Thankar Bachan
    சென்னை: "மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகளை விருப்ப பாடமாக வைக்கலாம்'' என்று இயக்குநர் தங்கர்பச்சான் யோசனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சினிமா அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    இன்றைய தலைமுறையினருக்கு வயிற்றுப்பிழைப்புக்கான கல்வியைத்தான் அளித்து கொண்டிருக்கிறோம். எங்கு படித்தால் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை விட எங்கு படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பதைத்தான் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். தாய்மொழியை கட்டாய பாடம் ஆக்குவதன் மூலம் இந்த மண்ணையும், மக்களையும், மொழியையும், இனத்தையும் நாட்டுப்பற்றையும் நமது இலக்கிய வரலாற்றையும் நம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டியது கடமை.

    எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியது தாய்மொழி வழிக் கல்விதான். தமிழில் பேசுவதை தரக்குறைவாகவும், ஆங்கிலத்தில் பேசுவதை தகுதி உடையதாகவும் நினைக்கும் போக்கு இங்கு வளர்ந்து இருக்கிறது. படித்தவர்கள்தான் பல மொழி கலந்துபேசி தமிழை சிதைத்துவிட்டோம். படிக்காதவர்கள் ஒழுங்காக தமிழ் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களையும், படித்தவர்கள் சிதைத்துவிட்டார்கள்.

    கல்லூரிகளில் விருப்ப பாடமாக வெளிநாட்டு மொழிகள்

    தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் உயர்கல்வி வரை தமிழ்மொழியை கட்டாய பாடமாக்க வைக்க வேண்டியது அவசியம். அதேபோல், இன்றைய காலகட்டத்தில் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது சிறப்பு பாடமாக படித்த ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழி. பெரும்பாலான மாணவர்கள் ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழியை கற்காததால் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு இருந்தும் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்.

    இந்தியாவில் பணிபுரிய இந்தியும், வெளிநாடுகளில் பணிபுரிய ஸ்பானிஷ், ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு உள்பட ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழியை உயர் படிப்புகளில் விருப்ப பாடமாக கற்றுக்கொடுப்பதை கட்டாயமாக்கினால் அனைத்து மாணவர்களும், பெற்றோரும் ஏற்றுக்கொள்வார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க இருக்கும் தமிழக அரசு இந்த யோசனையையும் செவிசாய்த்து நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு தங்கர்பச்சான் கூறி உள்ளார்.

    English summary
    Tamil film director Thankar Bachan suggested the govt of Tamil Nadu to announce foreign languages as optional subject in Colleges.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X