புவனேஸ்வரி எங்க கட்சி!- சேதுராமன் விளக்கம்

மாறாக தங்களது கட்சியில்தான் அவர் இணைந்துள்ளார் என்று விளக்கமளித்துள்ளது அக்கட்சி.
வீட்டில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டு, சிறைக்காவலில் இருந்து இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை புவனேஸ்வரி இப்போது மீண்டும் செய்திகளில் பிரதான இடம் பிடித்துவிட்டார்.
இவர் நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில் இணைந்ததாகவும், அக்கட்சியின் மகளிரணி பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இதுகுறித்து டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் அரசியல் விவகாரக்குழு பரிந்துரையின் பேரில் நடிகை புவனேசுவரி அ.இ.மூ.மு.க.வில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நடிகை புவனேசுவரியும் கலந்து கொண்டார். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் ஒப்புதலின்பேரில் நடிகை புவனேசுவரிக்கு மாநில மகளிரணி பொறுப்பு அளிக்கப்படுவதாக கூட்டத்தில் பொதுசெயலாளர் இசக்கிமுத்து அறிவித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்பு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில்தான் டாக்டர் சேதுராமன் கட்சி நடத்தி வந்தார். ஆனால் ஸ்ரீதர் வாண்டையார் அந்தப் பெயரை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தாதல் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதுக் கட்சியைத் தொடங்கினார்.
இதையடுத்து சேதுராமன் கட்சி தனது பெயரை அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் என மாற்றியது. இந்த நிலையில்தான் எந்த மூவேந்தர் என்பதில் குழப்பமாகி புவனேஸ்வரியின் அரசியல் பிரவேச செய்தியில் குழப்பமாகி விட்டது.


Click it and Unblock the Notifications











