திவ்யாவுக்கு 'ஓகனேக்கல்' சிக்கல்!

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் டி.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக பல வன்முறைகள் கர்நாடகத்தில் அரங்கேற்றப்பட்டன. தமிழ்ப் படங்கள் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ் திரையரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் கண்டித்து தமிழ் திரைப்படத் துறையினர் உண்ணாவிரதம் இருந்தனர் சென்னையில்.
ஆனால் தமிழ்ப் படங்களில் நடிக்கும் திவ்யா இதில் கலந்து கொள்ளவில்லை. மாறாக கன்னட திரையுலகினர் நடத்திய போட்டி உண்ணாவிரத்தில் கலந்து கொண்டு தமிழ் திரைப்படத் துறையினரை அவமானப்படுத்தினார். தமிழர்களுக்கு எதிராக ஆவேசமாகவும் ஆபாசமாகவும் பேசினார்.
இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக முதலில் அறிவித்த திரையுலகினர், பின்னர் அமைதியாகி விட்டார்கள். இது தவறு. அந்த நடிகை தற்போது நடித்துள்ள வாரணம் ஆயிரம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் நடிகை திவ்யா மீது நடிகர் சஙகத் தலைவர் சரத் குமார் நடவடிக்கை எடுக்காவிட்டால், வாரணம் ஆயிரம் படத்தை இந்து மக்கள் கட்சி திரையிட அனுமதிக்காது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஓகனேக்கல் சிக்கலிலிருந்து திவ்யா தப்புவாரா?


Click it and Unblock the Notifications











