'கணவரின் நண்பர் உறவுக்கு அழைத்தார்'-கனகா

By Staff

Kanaga
என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று நடிகை கனகா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

நடிகை கனகா விவகாரம் தொடர்ந்து மர்மமாகவே நீடிக்கிறது. திடீரென்று திரையுலகிலிருந்து காணாமல் போனவர், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கணவரைக் காணவில்லை என்ற பரபரப்பு புகாரோடு தோன்றினார்.

"கடந்த 2007ம் ஆண்டில் முத்துக்குமார் என்பவருக்கும், எனக்கும் திருமணம் நடந்துவிட்டது. என் கணவர் முத்துக்குமார் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்தார்.

அவர் என்னுடன் 15 நாட்கள் தான் குடும்பம் நடத்தினார். அதன்பிறகு அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை யாராவது கடத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

இந்த நிலையில், சில தினங்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என் சொத்துக்களையெல்லாம் எழுதி கேட்கிறார்கள். கொடுக்கவில்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்கிறார்கள்..." என்று அப்போது கூறினார்.

பேட்டி அளித்ததற்கு மறுநாள் நடிகை கனகா காணாமல் போய்விட்டார். அவருடைய வீடு பூட்டிக்கிடந்தது. அவர் தந்தை மர்மமாக கடுதம் வேறு எழுதி வீட்டு வாசலில் செருகி வைத்திருந்தார்.

நேற்று அவர் மீண்டும் தன் வீட்டுக்கு வந்துவிட்டார். நிருபர்களை அழைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"எனக்கு கொலை மிரட்டல் வருவதால்தான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். அடிக்கடி இப்படி போய்விடுவேன். எனக்கென்று யாருமில்லை. அதனால்தான் இப்படி.

என் அப்பாவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மா உயிருடன் இருந்தபோதே எங்களுக்குள் உறவு இல்லை. இப்போது என்னை அவர் மீண்டும் பார்க்க விரும்புவதெல்லாம் என்னிடம் உள்ள சொத்துக்களை பிடுங்கத்தான்.

இதற்கிடையில், என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார். நான் சம்மதிக்கவில்லை. அதனால், அவரும் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறார்.

ஆவி அமுதாவுக்கு என் கணவர் முத்துக்குமாரை நன்றாக தெரியும். அவர்தான் அறிமுகப்படுத்தினார். ஆனால், அவர் இப்போது தெரியாது என்கிறார். இதிலிருந்தே என் கணவர் காணாமல் போனதற்கும், ஆவி அமுதாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறதல்லவா.." என்றார் கனகா.

கனகா மீது மான நஷ்ட வழக்கு!-ஆவி அமுதா:

கனகா எனக்கு வாடிக்கையாளர் மட்டுமே. ஆனால் அவரோ தேவையில்லாமல் என்னைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று ஆவி அமுதா கூறியுள்ளார்.

தனது கணவர் காணாமல் போய்விட்டதாக நடிகை கனகா கூறி வருகிறார். தனது கணவர் யார் என ஆவி அமுதாவுக்கு தெரியும், என் கணவர் காணாமல் போனதற்கும், அமுதாவுக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகப்படுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த புகார் பற்றி மறுப்பு தெரிவிக்க பத்திரிகையாளர்களை அழைத்தார் ஆவி அமுதா. அவர் கூறியதாவது கூறியது:

நடிகை கனகா முன்பு ஒரு முறை என்னைப் பார்க்க வந்துள்ளார். ஒரு வாடிக்கையாளராக தான் அவர் எனக்கு தெரியும். அவருக்கு நான் முத்துக்குமார் என்பவரை அறிமுகமும் செய்யவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. யார் யாருடன் நட்புடன் இருக்கிறார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியாது.

நடிகை கனகா கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. அவர் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது. அவர் கணவரை நான் ஏன் கடத்த வேண்டும்?

2007-ம் ஆண்டு திருமணமானது என்று கூறுகிறார். 2010-ல் கணவர் காணாமல் போய்விட்டார் என்கிறார். அதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்றும் தெரியவில்லை. அவர் முதலில் நல்ல டாக்டரைப் பார்க்க வேண்டும். அல்லது நடந்தது என்னவோ அதை முழுமையாக சொல்ல வேண்டும்.

தன் கணவரின் போட்டோவை காட்டினாலாவது அவர் யார் என்று தெரிகிறதா பார்க்கலாம் என்றால் போட்டோவும் இல்லை என்று கூறியுள்ளார். பதிவு திருமணம் செய்திருப்பதாக கூறுகிறார். எங்கு பதிவு திருமணம் செய்தார், அதன் பிறகு ஒரு போட்டோ கூட எடுக்கவில்லையா... யார் சாட்சியாக இருந்தார்கள் என்பதையெல்லாம் அவர் சொல்ல வேண்டும்.

மான நஷ்ட வழக்கு போடுவேன்!

அவரது எந்த குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நான் சன்மார்க்க பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலராக இருக்கிறேன். தியானம் மற்றும் மன பயிற்சிகள் அளித்து வருகிறேன். இந்த நிலையில் கனகா கூறியுள்ள புகார்களால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.

எனவே அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். இதற்காக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்...", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X