விபச்சாரம்-சென்னையில் மெகா சிரியல் நடிகை கைது
வேலை வாங்கி தருவதாக கூறி வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்களை சென்னைக்கு கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தெலுங்கு டிவி மெகா தொடர்களில் நடிக்கும் துணை நடிகை கைது செய்யப்ப்டடார்.
சென்னை தியாகராய நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் சில புரோக்கர்கள் இளம்பெண்கள் சிலரை வைத்து விபச்சாரம் செய்வதாக வந்த தகவலையடுத்து விபச்சாரத் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தப் படையினரிடம் மதுலதா, தேவி ஆகிய புரோக்கர்கள் சிக்கினர்.
இந்தப் பெண்களின் கட்டுப்பாட்டில் இருந்த சுருதி (19), பிரியா (23) ஆகிய பெண்களை போலீசார் மீட்டதோடு புரோக்கர்களை கைது செய்தனர்.
இதில் தேவி ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார். பல தெலுங்கு டிவி மெகா தொடர்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அவரது கணவர் சினிமா துணை நடிகர்.
ஆந்திராவிலிருந்து பெண்களை கொண்டு வந்து சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
அதேபோல், திருவல்லிக்கேணி உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் ராஜா, விஜய்கிருஷ்ணா, பிரபு என மூன்று புரோக்கர்களை கைது செய்த போலீசார் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ருக்மணி (23) என்ற பெண்ணை மீட்டனர்.


Click it and Unblock the Notifications











