வெளியான படங்கள் 195... வெற்றி பெற்றதோ வெறும் 10 !- ராம நாராயணன்

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடந்த வருடம் (2010) தமிழில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நேரடித் தமிழ்ப்படங்கள் 145. மொழி மாற்றுப் படங்கள் 50. எந்த ஆண்டையும் விட கடந்த ஆண்டுதான் அதிகமான படங்கள் வெளிவந்துள்ளன.
இது ஒரு சாதனை என்று சொல்ல முடியாது. சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். கட்டை விரல் போல் சுண்டு விரலும் பெரிதாக ஆகி இருக்கிறது. இதை வளர்ச்சி என்று சொல்வதை விட வியாதி என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் இந்த 195 படங்களில் பத்து படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன.
மீதி படங்கள் தயாரிப்பாளர்களை தெருவோரம் கொண்டு போய் விட்டிருக்கிறது. இது குறித்தும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற தமிழக அரசின் நல்ல எண்ணத்திற்கு ஏற்ப, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகினருக்கும் சென்னை அருகே பையனூரில் வீடுகள் கட்ட இடம் ஒதுக்கி உள்ளார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் பிலிம்சேம்பர் திரையரங்கத்தில் கூடும் இக்கட்டான, இன்றியமையாத பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்..."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











