twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விபச்சார பெண்கள் பற்றி செய்தி போடாதீர்கள் - ரஜினி உருக்கம்

    |

    Rajini
    இரண்டு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் இறங்கும் பெண்களைப் படம் பிடித்து செய்தி போடுவது சரியில்லை. இதைப் பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.

    அக்டோபர் 7 புதன்கிழமை நடந்த நடிகர் சங்க அவசரக் கூட்டத்தில் பங்கேற்று ரஜினி பேசியதாவது:

    பொதுவா எனக்குக் கோபம் வந்தா அதிகம் பேசமாட்டேன். ரிலாக்ஸான மைன்ட்ல இருக்கும்போது நிறையப் பேசுவேன். இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்.

    அந்தப் பத்திரிகையில போட்டோவோட செய்தி பார்த்தப்போ எனக்கே மனசு சரியில்லை. ஒருவேளை ஏப்ரல் ஒண்ணா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா தேதியைப் பார்த்தப்போதான் இது சீரியஸ் மேட்டர்னு புரிஞ்சது. ஒரு வேலையும் ஓடல. என்ன செய்யுறதுன்னே தெரியல.

    பொதுவா விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்களை பர்தா போட்டு மூடி போலீசார் அழைச்சிட்டுப் போறதை படம் பிடிச்சி போடறதை பார்க்கும்போதே மனசுக்கு கஷ்டமா இருக்கும். பத்திரிகைகள் தயவு செய்து இதைச் செய்யக்கூடாது.

    சோத்துக்குத்தானே தப்பு செய்றாங்க...

    கேவலம், ரெண்டு வேளை சோத்துக்குதானே இவங்க அப்படி தப்பு செய்றாங்கன்னு தோணும். தப்பு செஞ்ச அவங்க மேலேயே நமக்கு இவ்வளவு அனுதாபம் வரும்போது, தவறே செய்யாத இங்க உட்கார்ந்திருக்கிற நம்ம சகோதரிகளைப் பத்தி போட்டோவோட நியூஸ் வந்தா அவங்க மனசு என்ன பாடுபடும்...

    நான் சொல்றேன்... நீங்க தப்பு செஞ்சீங்களா இல்லையான்னு உங்களுக்குத் தெரியும். உங்க உறவுக்காரங்க, அப்பா அம்மா, பிள்ளைங்களுக்குத் தெரியும... அந்த ஆண்டவனுக்குத் தெரியும்... இதெல்லாம் ஒண்ணுமில்லை... மனசைத் தளர விடாதீங்க.

    நான் கேட்கிறதெல்லாம்... உண்மையிலேயே இவங்க தப்பு செஞ்சிருந்தாங்கன்னா, அதை ஆதாரத்தோட நிரூபிச்சி தண்டனை வாங்கிக் கொடுங்க. ஆனா இப்படி ஆதாரமில்லாம போட்டோ போட்டு அசிங்கப்படுத்தக்கூடாது. நான் ரொம்ப நேரம் பேசினா உணர்ச்சிவசப்பட்டுடுவேன். அதனால இதோட முடிச்சிக்க விரும்பறேன்.

    இப்போ கடைசியா ஒரு நல்ல செய்தி வந்திருக்கு... அந்த நியூஸ் போட்ட பத்திரிகை ஆசிரியரை கைது பண்ணியிருக்கிறதா செய்தி வந்திருக்கு. காவல் துறையினருக்கு நன்றி... இந்த அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் கலைஞருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்... என்றார் ரஜினி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X