twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பன்னாட்டு நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட பிரமாண்ட சினிமா'!- ஹஸாரே போராட்டம் பற்றி எஸ்பி ஜனநாதன்

    By Shankar
    |

    S P Jananathan
    அரசியல், சினிமா இரண்டிலுமே தெளிவான பார்வை கொண்ட மிகச் சில இயக்குநர்களில் ஜனநாதனும் ஒருவர். யாரையும் பொய்யாகப் புகழ்வதும், வீணாகத் திட்டுவதும் இல்லாத படைப்பாளி.

    இன்றைக்கு திரைப்படங்களில் பொது உடைமைச் சித்தாந்தத்தை மிக எளிமையாக சொல்ல இவரைவிட்டால் ஆளில்லை.

    அவரிடம் அன்னா ஹஸாரேவின் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தது விகடன்.

    அதற்கு அவர் அளித்த பதில், இன்னொரு சாளரத்தை திறந்துவிட்டது போலிருந்தது.

    ''அதில் நல்லெண்ணத்தின் கோஷம் இருந்தது. ஆனால், ஆழமான அரசியல் பார்வைகள் இல்லை. ஹஜாரே எம்.பி-க்களை விமர்சிக்கிறாரே தவிர, நாடாளுமன்றத்தை உருவாக்கும் தேர்தல் முறையை விமர்சிக்க வில்லை. உண்மையில் விமர்சிக்கப்பட வேண்டியது நாடாளுமன்ற அமைப்புதான். இங்கு இருக்கும் தேர்தல் முறையிலேயே ஏராளமான கோளாறுகள் உள்ளன.

    1961-ல் அண்ணா தலைமையில் நடந்த கோவை தி.மு.க. தேர்தல் மாநாட்டில் 'விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று தீர்மானம் போட்டார்கள். அந்தத் தீர்மானத்துக்கான தேவை இன்றும் இருக்கிறது.

    தோழர் லெனின், 'சுவிட்சர்லாந்து நாட்டு நாடாளுமன்ற முறை முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சம்" என்றார். அங்கு பெரும்பான்மையான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது இல்லை. மக்களின் பொது வாக்கெடுப்பு மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன. அங்கு மக்களிடம்தான் இறையாண்மை இருக்குமே தவிர, ஆளும் அரசிடம் இல்லை.

    அமீரும் சீமானும் இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக ஆட்சியாளர்கள் சொன்னார்கள். உண்மையில் அவர்கள் வாதப்படி அண்ணா ஹஸாரேதான் இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார். தான் உருவாக்கிய கமிட்டியிலேயே தென்னிந்தியர்களுக்கும் தலித்துகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்காத ஹஸாரேவுக்கு மக்கள் பிரதிநிதித்துவம்பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அம்பேத்கர் பற்றி இவர் பேசலாமா?

    தீப்பந்தம் ஏந்த வேண்டியவர்களை மெழுகுவத்தி ஏந்த வைத்ததுதான் ஹஜாரே செய்த சாதனை. அது மத்தியதர வர்க்கம் கொண்டாடிய தேசிய தீபாவளி.

    இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுப்பதற்கு என்று கணிசமான தொகையைத் தங்கள் பட்ஜெட்டில் ஒதுக்குகின்றன. அந்தத் தொகையைக் குறைக்க வேண்டும் அல்லது இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட சினிமாதான் அண்ணா ஹஸாரேவின் போராட்டம்!

    -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    SP Jananathan, the director known for his progressive thoughts in film industry blasted Anna Hazare's protest as Diwali of Middle class and planned protest to save the money of MNCs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X