சரிதா விவாகரத்து வழக்கு-செப்.21க்கு தள்ளிவைப்பு

தமிழ், மலையாளப் படங்களில் நடித்த பிரபலமான நடிகை சரிதா. இவரது கணவர் முகேஷ். இவர் பிரபலமான மலையாள நடிகர். தற்போது டிவி தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 1987ம் ஆண்டு இருவரும் மணம் புரிந்தனர். பத்து வருடங்கள் ஒன்றாக வசித்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் சரிதா.
சென்னை குடும்ப நல கோர்ட் இதை விசாரித்த சமரச மையத்திற்கு அனுப்பியது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை இதையடுத்து பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு செய்தனர்.
ஆறு மாதங்களுக்கு பின், இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. குடும்ப கோர்ட் நீதிபதி ராமலிங்கம் முன் சரிதாவும், முகேஷும் ஆஜராகினர். இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். பின், செப்டம்பர் 21ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
More from Filmibeat
actor mukesh actress saritha சரிதா விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப கோர்ட் நடிகர் முகேஷ் நடிகை சரிதா chennai family court saritha divorce case


Click it and Unblock the Notifications











