பிரம்மபுத்ராவில் பெங்களூர் அழகி அக்ஷதா அறிமுகம்!

லட்சியவாதிகளின் பாதை மாறினால் அந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
திருடி படத்தில் நாயகனாக நடித்த முரளி, சின்ன இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நாயகனாகிறார். இவருக்கு ஜோடி அக்ஷதா. பெங்களூரைச் சேர்ந்த பிரபல மாடல் இவர்.
அமுதே படத்துக்கு இசையமைத்த சுனில் சேவியர் இசையமைக்க, பிரிவோம் சந்திப்போம் எடிட்டர் சரவணன் இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். ஜே மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் மக்கள் தொடர்பாளராக அறிமுகமாகிறார் ராஜேஷ்.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. விசி குகநாதன் பூஜையில் பங்கேற்று துவங்கி வைத்தார். திரையுலகப் பிரமுகர்கள் வந்து வாழ்த்தினர்.
Comments


Click it and Unblock the Notifications