கடத்தப்பட்டாரா கே எஸ் ரவிக்குமார் மகள்?

பிரபல சினிமா இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். இவரது மகளை கோவையை சேர்ந்த ஒருவர் கடத்திவிட்டதாகவும், அது குறித்து புகார் செய்வதற்காக கே.எஸ். ரவிக்குமார் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று காலை வருவதாகவும் தகவல் பரவியது.
இதனால் பத்திரிகை மற்றும் டி.வி.க்களின் நிருபர்கள், போட்டோ கிராபர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குவிந்தனர். காலை 10 மணிக்கு வந்த அவர்கள் 11 மணி வரை காத்து இருந்தனர்.
ஆனால் கே.எஸ். ரவிக்குமாரோ அவரது சார்பில் யாருமோ புகார் செய்ய வரவில்லை. இது குறித்து சென்னையில் உள்ள திரைப்பட பிரமுகர்களிடம் கேட்ட போது கே.எஸ். ரவிக்குமார் கோவை வரவில்லை என்று கூறினார்கள்.
ரவிக்குமார் வீட்டில் விசாரித்தபோது, இது முழுக்க முழுக்க வதந்தி என்றனர்.


Click it and Unblock the Notifications











