Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்கே போகிறது கோலிவுட்?
நாளிதழ்களில் வரும் கலர் கலர் சினிமா விளம்பரங்களைப் பார்ப்போருக்கு ஒரு வித்தியாசம் நன்றாகத் தெரியும். முக்கால்வாசி விளம்பரங்களில் ஆபாசமான, கவர்ச்சிகரமான போஸ்களுடன் கூடிய நடிகைகளைத்தான் பார்க்க முடிகிறது. அப்படி இல்லாவிட்டால் டபுள் மீனிங்குடன் கூடிய பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரத்தைக் காணலாம்.
ஏன் இப்படி...?
கெட்டியான கதைகளைக் காட்டி ரசிகர்களை இழுத்தது அந்தக் காலம். ஆனால் இப்போதோ விதம் விதமான 'குட்டிகளின் சதை'களைக் காட்டி கலர் கலராக விளம்பரம் கொடுத்து, ஒரு மாதிரியான பன்ச் லைன்களுடன் கூடிய விளம்பரங்களைக் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான, உண்மையிலேயே அருமையான படங்களும் வரத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கால் விரல்களையும் சேர்த்து வைத்து எண்ணினாலும் போதாது என்று கூறும் அளவுக்கு காமத்தையும், செக்ஸையும், வன்முறையையும் வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகி விட்டது.
இலக்கணப் பிழை என்று ஒரு படம். எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை என்று ரசித்தபடி அந்தப் படத்தின் ஸ்டில்லைப் பார்த்தால் படத்தின் நாயகியை படு கவர்ச்சிகரமாக போட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் அந்த நடிகை படுத்தபடியும், சாய்ந்தபடியுமே காணப்படுகிறார்.
அதேபோல தேவலீலை என்ற படத்தின் விளம்பரமும் இப்படித்தான் கந்தரகோலமாக காமாந்திர சாயலுடன் உள்ளது. அந்தரங்கம் என்ற படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் கொடுத்தனர்.
துரோகம் நடந்தது என்ன என்ற படத்துக்கான விளம்பரங்கள் படு கவர்ச்சிகரமாக, பட்டவர்த்தனமான காமச்சாயலுடன் வெளியானது-அதுவும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்.
தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் இப்படித்தான் காமத்தையும், வன்முறையையும், கள்ளக்காதல்களையும் மையமாக கொண்டு உருவாக்கப்படுகின்றனவாம். கேட்டால் சினிமாவில் கவர்ச்சி தவிர்க்க முடியாதது என்கிறார்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலர்.
கவர்ச்சி சரிதான், அதுவே 'கவுச்சி'யாகி விட்டால் நாற்றம் தாங்க முடியாதே!?