மாயமான நடிகரும் நடிகையும் மணமக்களாகத் திரும்பினர்!
சென்னை: வளசரவாக்கத்தில் வசித்து வந்த தெலுங்கு நடிகை பர்வீன் மற்றும் நடிகர் யுவராஜ் திடீரென்று மாயமாகிவிட்டனர்.
ஒரே நாளில் இருவரும் காணாமல் போனது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தவர் தெலுங்கு நடிகை பர்வீன். நேற்று திடீரென்று மாயமானார். மகளைக் காணவில்லை என்று பர்வீனின் தாயார் போலீஸில் நேரில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் மாங்காடு பகுதியில் உள்ள தெலுங்கு நடிகர் யுவராஜும் மாயமானது தெரியவந்தது. இந்த இருவர் காணாமல் போனதற்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரித்தனர். இருவரையும் சென்னை முழுக்கத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பர்வீனும் தெலுங்கு நடிகர் யுவராஜும் சென்னை மணப்பாக்கத்தில் தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரித்ததில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
More from Filmibeat
abscond சினிமா தெலுங்கு நடிகை பர்வீன் நடிகர் நடிகை மாயம் போலீஸார் விசாரணை cinema police search telugu actressactor


Click it and Unblock the Notifications











