கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம்

முதல்வர் கருணாநிதியை, பழைய தலைமைச் செயலகம் உள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் குஷ்பு தலைமையில் சின்னத்திரை கலைஞர்கள் சந்தித்தனர்.
அப்போது சின்னத்திரை கலைஞர்கள் வீடு கட்டிக்கொள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த ரிம்பா முலியா மேலாண்மை நிறுவனத்தின் சார்பாக இப் கெங்க் ஹுங்க் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
திரையுலகினருக்கு தமிழக அரசு வீடு கட்டி வாழ நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்திலேயே சின்னத்திரை துறையினருக்கும் இடத்தைக் கொடுத்துள்ளனர். அங்குதான் தற்போது சின்னத்திரை துறையினர் வீடு கட்டப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
சின்னத்திரை நடிகர் நடிகையர் தயாரிப்பாளர் தலைவி குஷ்பு முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு cm karunanidhi kushboo small scree artitsts


Click it and Unblock the Notifications