பிற்பட்ட மக்களை மேம்படுத்தியது சினிமா! - வாலி

By Sudha

Vaali
சினிமா மட்டும் இல்லாமலிருந்திருந்தால் எத்தனையோ ஆயிரம் பிற்பட்ட மக்கள் மேம்பட்டிருக்க முடியாமல் போயிருக்கும் என்றார் கவிஞர் வாலி.

புதுச்சேரியில் நடந்த கம்பன் விழாவில், கம்பன் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவித்த மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்து அவர் பேசியது:

சினிமா ஒரு வலிமையான சாதனம். அதை குறை சொல்ல வேண்டியதில்லை. சினிமாவில் இருப்பவர்களை ஏளனமாக சிலர் பார்ப்பதும், விமர்சிப்பதும் அறிந்ததுதான். இங்கே கூட சிலர் சினிமா குறித்துப் பேசினார்கள்.

20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் பெரியார் மட்டுமில்லாமல் நாடகத்தையும், எழுத்தையும் வலிமை மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தியவர் அண்ணா.

சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் வசனங்களை சினிமாவில் அண்ணாவும் கருணாநிதியும் பயன்படுத்தினர். சினிமா இல்லாமலிருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பிற்பட்ட மக்கள் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வந்திருக்க முடியாது.

சினிமாவுக்கு அப்பாலும் எனக்கு ஒரு முகம் இருக்கிறது. சினிமாவுக்குப் பாட்டு எழுதியவர்களில் என்னுடன், உடுமலை நாராயணக்கவி, கண்ணதாசன் ஆகியோர் கம்பன் விழாக்களிலும் பங்கேற்றுள்ளோம்..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X