முதல் கணவர் ஆகாஷ் மீது போலீசில் வனிதா புகார்!

நடிகர் விஜயகுமார் மகள் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.
வனிதா கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார், மஞ்சுளா, அருண்விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை போலீஸ். விஜயகுமாரும் மஞ்சுளாவும் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். விஜயகுமார் மீது வனிதா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந் நிலையில் வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ், திடீரென போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் வந்தார். வனிதா பொய்யான தகவல்களை கூறி வருகிறார். விஜய்ஸ்ரீஹரி என்னுடன் இருப்பதற்குதான் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது என்று கூறினார்.
ஆனால் நேற்று மாலையில் வனிதா திடீரென நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் கொடுத்தார். தனது முதல் கணவர் ஆகாஷிடமிருந்து மகன் விஜய் ஸ்ரீஹரியை மீட்டுத் தாருங்கள் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆகாஷின் நண்பர் ஒருவர் மீதும் வனிதா புகார் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆகாஷிடமிருந்து மகனை பறிக்க முயன்றால் உனது குழந்தைகளை கடத்திச் சென்றுவிடுவோம் என்று ஆகாஷின் நண்பர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











