மீண்டும் தல்லி தெலுங்கானாவை தொடங்க நேரிடும் - விஜயசாந்தி எச்சரிக்கை

By Staff

Vijayasanthi
ஹைதராபாத்: என்னை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியிலிருந்து நீக்க சிலர் முயற்சிக்கின்றனர். அப்படி நடந்தால் நான் மீண்டும் தல்லி தெலுங்கானாவை தொடங்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் டி.ஆர்.எஸ். எம்.பியான விஜயசாந்தி.

ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார் விஜயசாந்தி. பின்னர் அதிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.

அதன் பின்னர் அக்கட்சியை சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைத்தார். இக்கட்சியின் சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில் மேடக் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டியை விஜயசாந்தி சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் கிளம்பின.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார் விஜயசாந்தி. தன்னை கட்சியை விட்டு விரட்ட சில தலைவர்கள் முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் முதல்வரைச் சந்தித்த பின்னர்தான் எனக்கு எதிராக கட்சிக்குள் சிலர் சதித் திட்டம் தீட்ட ஆரம்பித்தனர்.

நான் முதல்வரை சந்திக்கப் போவதையும், எதற்காக சந்திக்கப் போகிறேன் என்பதையும் ஏற்கனவே கட்சித் தலைவர் சந்திரசேகர ராவிடம் விளக்கிக் கூறியிருந்தேன்.

ஆனால் கட்சிக்குள் உள்ள சிலர் எனக்கு எதிராக கட்சித் தலைமையிடம் தவறான தகவல்களைக் கொடுத்து கட்சியை விட்டு என்னை நீக்க முயற்சித்து வருகின்றனர்.

நான் செய்ததிலோ அல்லது பேசியதிலோ எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.

எனது சேவையை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் தோல்வி அடைந்து விட்டது. மேலும், என்னை ஜாதி அடிப்படையில் கட்சித் தலைவர்கள் பாரபட்சமாக நடத்தி வருகின்றனர்.

நானாகவே கட்சியை விட்டு விலக வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்கள். என்னை தொடர்ந்து புறக்கணித்தால் மீண்டும் தல்லி தெலுங்கானா கட்சியை தொடங்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார் விஜயசாந்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X